இளம்பெண் பாலியல் பலாத்கார விவகாரம்: அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
இளம்பெண் பாலியல் பலாத்கார விவகாரம்: அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் விருதுநகரில் நடந்தது.
விருதுநகர்,
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் சாத்தூர் ரோட்டில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகரில் 22 வயதான இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருவருக்கு இதில் தொடர்புள்ளது. தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் இச்சம்பவம் பற்றி தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இந்த வழக்கு விசாரணை இந்தியாவுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று அறிவித்தார். பாரதீய ஜனதா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியில்லாதபட்சத்தில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற பாரதீய ஜனதா நடவடிக்கை எடுக்கும்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்குவதுடன் பெண்ணின் பெயரில் வைப்பு நிதிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் டெல்லியில் ராகுல்காந்தி அருகில் முகாமிட்டுள்ளார். தொகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது அவசியமாகும் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story