பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* புதுச்சேரி-கன்னியாகுமரி (வண்டி எண்:16861) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந்தேதி, கன்னியாகுமரி-புதுச்சேரி (16862) இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரம்-நாகர்கோவில் (16191) இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரையும், நாகர்கோவில்-தாம்பரம் (16192) இடையே இயக்கப்படும் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மற்றும் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி விருதுநகர்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* நாகர்கோவில்-கோவை (16321), கோவை-நாகர்கோவில் (16322) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நாகர்கோவில்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* குருவாயூர்-சென்னை எழும்பூர் (16128) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நெல்லை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-குருவாயூர் (16127) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை எழும்பூர்-நெல்லை இடையே பகுதியாக ரத்து செயப்படுகிறது.
* புனலூர்-மதுரை (16730) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரையிலும், மதுரை-புனலூர் (16729) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரையிலும் நெல்லை-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
தாதர்-நெல்லை (11021) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26, 29, 30-ந்தேதி, மறுமார்க்கமாக நெல்லை-தாதர் (11022) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28, 31-ந்தேதி, ஏப்ரல் 1-ந்தேதிகளில் நெல்லை-விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மைசூரு-தூத்துக்குடி (16236) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரையிலும், தூத்துக்குடி-மைசூரு (16235) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 29-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரையிலும் தூத்துக்குடி-விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரம்-நாகர்கோவில் (16192) அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 31-ந்தேதி மற்றும் ஏப்ரல் 1-ந்தேதிகளில் மதுரை-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருச்சி-திருவனந்தபுரம் (22627), திருவனந்தபுரம்-திருச்சி (22628) இடையே இயக்கப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story