சுகாதாரமான முறையில் அன்னதானம் விநியோகம் - மதுரையில் 13 கோவில்களுக்கு தரச்சான்றிதழ்
சுகாதாரமான முறையில் அன்னதானம் விநியோகத்திற்காக மதுரையில் 13 கோவில்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை,
வழிபாட்டுத் தளங்களில் சமைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் தரச்சான்றிதழ் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் மதுரையில் 34 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு 13 கோவில்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், அழகர் கோவில் தல்லாகுளம் பெருமாள் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட 13 கோவில்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரை இன்னும் ஒரு மாதத்திற்குள் தணிக்கை இறுதி செய்யப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story