தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு


தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அப்பாவு
x
தினத்தந்தி 25 March 2022 12:29 PM IST (Updated: 25 March 2022 12:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற விவாதம் 24 ஆம் தேதி நிறைவு பெற்றது. விவாதத்தின் இறுதி நாளன்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்ற கூட்டத்தொடர், நேற்று வரை பேரவை நடைபெற்ற பேரவை மண்டபத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார். 

இதனை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள சட்டப்பேரவையில், எந்தெந்த தேதிகளில் எந்த மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Next Story