ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 25 March 2022 1:42 PM IST (Updated: 25 March 2022 1:42 PM IST)
t-max-icont-min-icon

ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

துபாய்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ந்தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. அங்குள்ள தமிழ்நாடு அரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபியில் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று தனி விமானம் மூலம் துபாய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பயணம் செய்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட  பி.எம்.டபிள்யூ. காரை துபாய் அரசு வழங்கியுள்ளது. 

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக துபாய்க்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் மந்திரிகள் இதில் பங்கேற்றுள்ளனர். 

மேலும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்க புதிய ஒப்பந்தகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story