வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது - மின்சார வாரியம் எச்சரிக்கை
வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும்29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், 28 மற்றும் 29ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 28 மற்றும் 29ம் தேதிகளில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story