அரசு பேருந்து சைவ உணவகங்களில் மட்டும் நிற்கும் என்ற போக்குவரத்து கழகத்தின் நிபந்தனை நீக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 March 2022 3:51 PM IST (Updated: 25 March 2022 3:51 PM IST)
t-max-icont-min-icon

சைவ உணவங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்ற அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தங்கள் உணவகங்களில் அரசு பேருந்து நிற்க வேண்டும் என விண்ணப்பிக்கும் உணவகங்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டது. 

அந்த புதிய பட்டியலில், சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், சைவ உணவங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்ற அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அசைவ உணவுகளையும் சாப்பிட விரும்புவார்கள் என்பதால், புதிய அறிவிப்பில் இத்தகைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.


Next Story