நாமக்கல்: மண்ணுக்குள் புதைந்த 2 கூலி தொழிலாளிகள் உயிருடன் மீட்பு....!
நாமக்கல் அருகே கட்டுமான பணியின் போது மண்ணுக்குள் புதைந்த 2 கூலி தொழிலாளர்களை தீணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனியார் நிதி நிறுவன மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நல்லிபாளையத்தில் புதிதாக வீடு கட்ட அஸ்திவாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக கட்டுமான கூலி தொழிலாளர்களான முதலைப்பட்டியை சேர்ந்த சின்னுசாமி மற்றும் தாதம்பட்டியை சேர்ந்த சுப்ரமணி ஆகியோர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 10 அடி ஆழம் குழி தோண்டியபோது எதிர்பாரத விதமாக திடீரென மண் சரிந்ததால், கூலித் தொழிலாளர்கள் சின்னசாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் மண்ணில் புதைந்தனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அப்பகுதி மக்களின் உதவியோடு, கூலி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்களை மீட்க முடியாததால், நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கூலி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் சுவாசிக்க ஏதுவான நடவடிக்கைகளை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்
Related Tags :
Next Story