புதுச்சேரி பி ஆர் டி சி ஊழியர்கள் தொடர் போராட்ட அறிவிப்பு
அதிகாரியை கண்டித்து பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி
அதிகாரியை கண்டித்து பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க கவுரவ தலைவர் பாலமோகனன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.27 கோடி நஷ்டம்
புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 40 மார்கோ போலோ பஸ்கள் வாங்கியதில் ரூ.27 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி விஜயன் கமிட்டி பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை சமர்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துணை மேலாளர் உள்பட 18 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தாமல், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் சாலை போக்குவரத்து கழகத்திற்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க விஜயன் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
தொடர் போராட்டம்
இதற்கிடையே பி.ஆர்.டி.சி.க்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அதிகாரி அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்தநிலையில் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஒரு மாதமான நிலையில் புகார் கூறப்பட்ட பி.ஆர்.டி.சி. அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story