துபாயில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் - ஏ.ஆர் ரகுமான் சந்திப்பு
துபாயில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் - இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் சந்தித்து பேசினர்.
சென்னை,
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் உலக அளவிலான எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெற்று வருகிறது. 5- வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் இந்தியா, அமீரகம் உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இவற்றின் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் கண்காட்சி தொடங்கியது . மாநில அரசுகளும் தங்கள் தளங்களை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில், ‘தமிழ்நாடு தளம்' உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தளத்தில் வருகிற 31-ந் தேதி வரை ‘தமிழ்நாடு வாரம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்றுள்ளார். துபாயில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், இந்திய அரங்கை பார்வையிட்டு தமிழ்நாடு தளத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் துபாயில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் - இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் சந்தித்து பேசினர்.
அதன்பின் ரகுமானின் ஸ்டூடியோவில் தான் இசையமைத்து வரும் தமிழ் ஆல்பம் பாடலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்டு காட்டினார் .
Related Tags :
Next Story