அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத்தொகையை வருகிற 31-ந்தேதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
புதுவை அரசு ஊழியர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி அவர்களுக்கு 2016 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான சம்பள உயர்வு தொகை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த தொகையை வழங்க புதுவை அரசு முடிவு செய்தது. இதற்காக நிதித்துறை அரசு ஊழியர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகையை கணக்கிட்டு அனுப்புமாறு அரசுத்துறைகளுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி விவரங்களை சேகரித்தது.
தற்போது அந்த தொகைகளை நிதியாண்டின் இறுதி மாதமான இந்த மாதத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தொகையை வருகிற 31-ந்தேதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலுவைத்தொகையானது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் கிடைக்கும். இதன்மூலம் சுமார் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு சுமார் ரூ.150 கோடி செலவாகும்.
Related Tags :
Next Story