கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் செக்போஸ்டில் புகுந்த ஆட்டோ...!


கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் செக்போஸ்டில் புகுந்த ஆட்டோ...!
x
தினத்தந்தி 26 March 2022 7:00 PM IST (Updated: 26 March 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ போலீஸ் செக்போஸ்டில் புகுந்த விபத்தில் ஒருவர் காயம்.

மலைக்கோட்டை, 

திருச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ போலீஸ் செக்போஸ்டில் புகுந்த விபத்தில் ஒருவர் காயம். 

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்கோவில் அருகே கொண்டையம் பேட்டை பைபாஸ் பகுதியில் புதிதாக ஒரு செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் இருந்து வந்த ஒரு ஆட்டோ திடீரென நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த செக்போஸ்டில் புகுந்தது. 

இந்த விபத்தில் செக்போஸ்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விஜயகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால் அருகில் நின்ற ஒரு முதியர் மீது ஆட்டோ மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை அறிந்த சம்பவ இடத்துக்க வந்த செக்போஸ் போலீசார் படுகாயம் அடைந்த முதியவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவரிடம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story