தனிப்பட்ட காரணங்களுக்காகவே முதல் அமைச்சர் துபாய் சென்றுள்ளார்- எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு


தனிப்பட்ட காரணங்களுக்காகவே முதல் அமைச்சர் துபாய் சென்றுள்ளார்- எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 March 2022 12:03 PM IST (Updated: 27 March 2022 12:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் துபாய் செல்லவில்லை; தனிப்பட்ட காரணங்களுக்காகவே துபாய் சென்றுள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது.  

தமிழ்நாட்டுக்கு நன்மை செய்ய மு.க ஸ்டாலின் துபாய் செல்லவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்குக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர்.  சர்வதேச  வர்த்தக கண்காட்சி முடியும் தருவாயில் அங்கு சென்றது ஏன்? நான் முதல் அமைச்சராக இருந்த போது வெளிநாடு சென்றதை ஸ்டாலின் விமர்சித்தது ஏன்?  

துபாய் சென்றது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்கவா? என மக்கள் பேசுகின்றனர். சசிகலா குறித்து ஓ. பன்னீர் செல்வம் கூறியது தனிப்பட்டது.  தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும் பொதுப் பிரச்சினையிலும்தான் வேறுபாடு” என்றார். 


Next Story