சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார் - 4 பேர் படுகாயம்...!


சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார் - 4 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 27 March 2022 1:45 PM IST (Updated: 27 March 2022 1:31 PM IST)
t-max-icont-min-icon

குமரி அருகே சாலையோர பள்ளத்தில் சொகுசு கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

குமரி,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் சுற்றுலாவிற்காக  ஒரு காரில் கன்னியாகுமரி வந்தனர். இவர்கள் குமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு களித்து உள்ளனர். பின்னர்  திற்பரப்பு அருவியில் குளித்துவிட்டு நேற்று மாலை வீடுதிரும்பினர். 

இவர்கள் சென்ற கார் அண்டூர் இந்திராநகர் பகுதியில் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக ஓடியது. அப்போது சாலையோரம் உள்ள ஒரு பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காருக்குள் சிக்கியிருந்தவர்ளை மீட்டு குலசேகரம் தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story