வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருது பெறும் தமிழர்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருது பெறும் தமிழர்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 27 March 2022 1:58 PM IST (Updated: 27 March 2022 1:58 PM IST)
t-max-icont-min-icon

புலிகளுக்கும், மனிதர்களுக்குமான வாழ்வியலை புகைப்படமாக பதிவு செய்ததற்காக செந்தில்குமரன் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

சென்னை,

உலக அளவில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ அமைப்பு சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதுக்கு மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

10 ஆண்டுகளாக புலிகளுக்கும், மனிதர்களுக்குமான வாழ்வியலை புகைப்படமாக பதிவு செய்ததற்காக செந்தில்குமரன் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த நிலையில் செந்தில்குமரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில், “மனித - வன விலங்கு மோதலை வெளிக்கொண்டு வரும் இவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை!” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story