முதல்-அமைச்சரின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அண்ணாமலை பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்


முதல்-அமைச்சரின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அண்ணாமலை பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்
x
தினத்தந்தி 27 March 2022 2:52 PM IST (Updated: 27 March 2022 2:52 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் அரசு முறை பயணம் குறித்து அண்ணாமலை பேச்சுக்கு இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றது குறித்து  பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2022 கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை அரங்குகளை திறந்து வைக்கவும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு வந்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கவும் முதல்-அமைச்சர் 4 நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். முதல்-அமைச்சரின் பயணம் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையானது. தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் துபாய் பயண மர்மம் என்றெல்லாம் அடிப்படையில்லாத ஆதரமற்ற புகார்களை பொது வெளியில் பேசிவருவது அருவெறுப்புத் தரும் அநாகரிக அரசியல் ஆகும். 

இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் அரசு முறைப் பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணாமலையின் இழி செயலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கண்டிக்கிறது என கூறினார்.


Next Story