சிவன் கோயில் கும்பாபிஷேகம் - வரவேற்பு பேனர் வைத்த இஸ்லாமியர்கள்..!
சிவன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை இஸ்லாமியர்கள் பேனர் வைத்து வரவேற்றனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு வருவோரை வரவேற்கும் விதமாக அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் பேனர் வைத்து வரவேற்றனர். அந்த பேனரில் விழாவிற்கு வருகை தரும் பெரியோர்கள், சான்றோர் பெருமக்கள், பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.. எனவும் உங்கள் வருகையில் மகிழும் சம்த்துவம் போற்றும் சாகோதர உள்ளங்கள்.. என எழுதப்பட்டிருந்தது.
சிவன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை இஸ்லாமியர்கள் பேனர் வைத்து வரவேற்ற சம்பவம் மதநல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story