எலி மருந்தில் பல் துலக்கிய முதியவர் சாவு
பற்பசை என நினைத்து எலி மருந்தில் பல் துலக்கிய முதியவர் பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி நவசக்திநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது 75). தச்சு தொழிலாளி. இவரது மனைவி கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின்னர் அவர் குடிபோதைக்கு அடிமையானார். கடந்த 19-ந் தேதி குடிபோதையில் இருந்த அவர் எலி மருந்தை பற்பசை என நினைத்து பல் துலக்கினார். பின்பு கசப்பு அதிகமாக இருந்ததால் இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சம்பந்தம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story