திருப்பதிக்கு விமான போக்குவரத்து
புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஐதராபாத்தில் இருந்து முதன்முதலில் வந்த விமானத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வளர்ச்சி பாதைக்கு...
புதுச்சேரியில் தற்போது மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. முதலில் ஐதராபாத், பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக புதுவையில் இருந்து திருப்பதி போன்ற ஆன்மிக நகரங்களுக்கும், மாநில தலைநகரங்களுக்கும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியின் சுற்றுலா, பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
விமான நிலைய விரிவாக்கம்
விமான நிலைய விரிவாக்கம் பற்றி மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை சந்தித்து பேசினேன். இதில் தமிழகமும் பங்கெடுக்க வேண்டும் என்பது அவரது கருத்து. நாம் தமிழகத்தின் எல்லையில் இருக்கிறோம். நமது விமான நிலையத்தை விரிவுபடுத்த தமிழக எல்லையில் நிலம் தேவைப்படுகிறது.
எனவே தமிழக அரசு கணக்கு பார்க்காமல் நமக்கு நிலத்தை கொடுத்தால் பறந்து விரிந்த விமான நிலையத்தை உருவாக்க முடியும். புதுவையில் பெரிய விமானம் நிலையம் அமையும் போது தமிழக மக்களும் இதில் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story