சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 27 March 2022 11:34 PM IST (Updated: 27 March 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

புதுவை சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுவை சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். புதுவையில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
வார இறுதிநாளான நேற்று புதுச்சேரி     ஒயிட் டவுன் மற்றும் புதுவை நகர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முக்கிய சுற்றுலா தலங்களான கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 
அலைஅலையாய் திரண்டனர்
பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் மாலையில் காற்று வாங்க சுற்றுலா பயணிகளுடன்    உள்ளூர் மக்களும் கடற்கரையில் அலைஅலையாய் மக்கள் திரண்டனர். பழைய துறைமுகம் முதல் தலைமை செயலகம் வரை உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பில் பொதுமக்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். 
புதுச்சேரி நகர பகுதியில் நேற்று   ஏராளமான  வெளி மாநில பதிவெண் கொண்ட கார்கள்     உலா  வந்தன. இதனால் முக்கிய   சாலை சந்திப்புகளில் அவ்வப்போது போக்குவரத்து      நெரிசல் ஏற்பட்டது.
சண்டே மார்க்கெட்
புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகள் நகரின் ஒயிட் டவுன் பகுதிகளில்  உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் காந்திவீதி சண்டே   மார்க்கெட்டில் காலை முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

Next Story