கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு துணை நிற்கும்
புதுச்சேரி மாநில கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு துணை நிற்கும் என அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
புதுச்சேரி மாநில கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு துணை நிற்கும் என அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
இசை, நாட்டிய விழா
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு இசை, நாட்டிய விழா மற்றும் நலிந்த கலைஞர்களுக்கான இசை நடன தொடக்க விழா கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகே நடந்தது. அரசு செயலர் நெடுஞ்செழியன் வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து பேசுகையில் புதுவை அரசு கலை, பண்பாட்டுத்துறை கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த நலிந்த கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு துணை நிற்கும் என்றார்.
வீணை நிகழ்ச்சி
முன்னதாக கந்தர்வாஸ் இசைக்குழுவின் தவில் நாதஸ்வரம், கலைமாமணி ஜெகதீசன் மாணவர்களின் வாய்ப்பாட்டு, ராபின் ராய் குழுவினரின் கருவி இசை, சுகுமார் இசைப்பள்ளி மாணவர்களின் வீணை நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
விழாவில் கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன், இளநிலை கணக்கு அதிகாரி ஜெயலட்சுமி, கண்காணிப்பாளர் சக்தி நாராயணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள்
இந்த விழா புதன்கிழமை வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் நாளை (திங்கட்கிழமை) கலாலயம் பைன் ஆர்ட்ஸ் அகடாமியின் நாட்டியம், டி.டி.சி. நடன கலைக்குழுவின் மேற்கத்திய நாட்டுபுற நடனம், பரதகலா மண்டலம் குழுவினரின் பரத நாட்டியம், சுவீட் ஹார்ட்ஸ் நடன பள்ளி மாணவர்களின் மேற்கத்திய நடனம் நடக்கிறது.
Related Tags :
Next Story