கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தீவனம்


கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தீவனம்
x
தினத்தந்தி 27 March 2022 11:53 PM IST (Updated: 27 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தீவனத்தை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்

புதுச்சேரி அரசு கால்நடைத்துறை, காரைக்கால் மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலமாக, கறவை மாடுகளுக்கும் மற்றும் கன்று குட்டிகளுக்கும் 75 சதவீத மானிய விலையில் பசுந்தீவனம் வழங்கும் நிகழ்ச்சி, காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் நடந்தது.
போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கி, கால்நடை வளர்ப்போருக்கு பசுந்தீவனத்தை வழங்கி, தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு, எம்.எல்.ஏ. நாஜிமும், நிரவி     - திருப்பட்டினம்   தொகுதி  விவசாயிகளுக்கு, எம்.எல்.ஏ. நாகதியாகராஜனும்    பசுந்தீவனத்தை   வழங்கினர். நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை  இயக்குனர்   லதா மங்கேஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 722 கறவை பசுக்களும், 166 கன்று   குட்டிகளுக்கும்  மொத்தம் 133 டன் பசுந்தீவனம் வழங்கப்படுகிறது.

Next Story