‘மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாக மக்கள் பார்க்கிறார்கள்’ எடப்பாடி பழனிசாமி பேட்டி
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாக மக்கள் பார்க்கிறார்கள் என்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் துபாய் சென்றதாக கூறப்பட்டது. அவருடன் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் சென்றது சரி. ஆனால் அவரின் துபாய் பயணத்தை மக்கள் குடும்ப சுற்றுலாவாகத்தான் பார்க்கிறார்கள்.
துபாய் சென்றது தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா?, அல்லது குடும்பத்திற்கு புதிய தொழிலை தொடங்கவா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர். குடும்பமே துபாய் சென்றது தனிப்பட்ட காரணத்திற்காகத்தான் என மக்கள் பேசி கொள்கின்றனர்.
வேடிக்கை
கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய சர்வதேச கண்காட்சி இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் அரங்கு தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. நான் வெளிநாடு சென்றபோது பயணிகள் விமானத்தில்தான் சென்றேன். துறை அமைச்சர்களும், செயலாளர்கள் மட்டுமே உடன் வந்தனர். லண்டனுக்கு சென்றபோது, நம்முடைய ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ஆய்வு செய்தோம். அதிநவீன மருத்துவ கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் பார்வையிட்டோம்.
கிங்ஸ் மருத்துவமனையை போல் தமிழ்நாட்டின் மருத்துவமனைகளை மாற்றுவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நான் அமைச்சர்களுடன் சுற்றுலா சென்றதாக அவதூறு கூறிய மு.க.ஸ்டாலின், இப்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வரவே நாங்கள் வெளிநாடு சென்றோம்.
சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை
தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்டங்களும், தலைமை கழகமும் இணைந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நானும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலா நீக்கப்பட்டதாக அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை.
யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது. சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்து தான்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Tags :
Next Story