தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம் முதல்-அமைச்சர் அறிக்கை
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதிலும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டு பயணம். இது, தமிழ்நாட்டின் முதலீட்டிற்கான பயணம். கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதையும், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா கோபுரத்தில் நம் செம்மொழியான தமிழ் வண்ண வண்ண விளக்குகளில் ஒளிர்ந்ததையும், தமிழ்நாட்டின் பெருமை - பாரம்பரியம் - அகழ்வாய்வுகள் காட்டும் தொன்மை ஆகியவற்றின் சிறப்புகள் உலகறிய வெளிப்பட்டதையும், தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த பயணத்தை பற்றி ஒரு சிலர் அரசியலுக்காக பேசி தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள நினைத்தாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக்கட்சியினரும்கூட மனதாரவும், மனதளவிலும் பாராட்டவே செய்கிறார்கள்.
ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு
தமிழ்நாட்டில் நமது அரசு அமைந்தபிறகு ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள டி.பி. வேர்ல்டு என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலைமானுடன் இரவு உணவு விருந்து நடைபெற்றது.
மறுநாள், மார்ச் 25-ந்தேதி அன்று காலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒன்றிய பொருளாதார மந்திரி அப்துல்லா பின் டூக் அல் மர்ரியை சந்திக்க வந்தேன். இந்த சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
புர்ஜ் கலீபா கோபுரம்
துபாய் எக்ஸ்போவில் இந்தியா பெவிலியனில், தமிழ்நாடு வாரத்தையொட்டி, தமிழ்நாட்டுக்கான அரங்கு திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்கு சென்று வந்தேன்.
எக்ஸ்போவை பார்வையிட்ட பிறகு, பேலஸ் டவுன்டவுன் என்கிற இடத்திற்கு சென்றோம். அங்குதான் உலகின் உயரமான புர்ஜ் கலீபா கோபுரம் அமைந்துள்ளது. தமிழின் பெருமை அங்கு காட்சிப்படுத்தப்படுவதை பார்ப்பதற்காக அமீரக தமிழ் மக்கள் பலரும் திரளாக வந்திருந்தனர்.
முதலீட்டாளர் மாநாடு
மார்ச் 26-ந்தேதி காலையில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றேன். மாலையில் துபாயில் மிக முக்கியமான 4 தொழிலதிபர்களுடனான சந்திப்பு நடந்தது. அங்கும் பல முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகு, துபாயில் வாழும் தமிழ்ச் சொந்தங்களை சந்திப்பதற்காகப் புறப்பட்டேன்.
துபாய் சென்றதிலிருந்து பன்னாட்டு நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் கோட்-சூட் உடை அணிந்து சென்று வந்தேன். தமிழ்ச் சொந்தங்களை சந்திக்கும் நிகழ்வு என்றதுமே வழக்கம்போல வேட்டி-சட்டை அணிந்து சென்றேன்.
தி.மு.க.வின் லட்சியம்
“தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். அதே நேரத்தில், நாம் தமிழினத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள். இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில்நுட்பத்தையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்யுங்கள்” என்று உரையாற்றினேன்.
மார்ச் 27-ந்தேதி (நேற்று) மாலை அபுதாபிக்கு சாலைவழிப்பயணம். நாளை (இன்று) அபுதாபியில் உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பு நடக்கிறது. கேரளாவைச் சேர்ந்த லூலு குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி, தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தின் சார்பில் முதலீடுகளை செய்வதில் ஆர்வமாக உள்ளார். அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதனைத்தொடர்ந்து, அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்குள்ள தமிழ்ச் சொந்தங்களை சந்தித்து மகிழ்கிறேன்.
அமீரக பயணம்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தி.மு.க. அரசு முனைப்புடன் உள்ளது. அமீரக பயணம் அதற்கேற்ற வகையில் முழுமையான வெற்றியை தந்துள்ளது.
கடல் கடந்து சென்றேன். கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன். திரைகடலோடி திரவியம் தேடும் தமிழ் பண்பாட்டின் வழியே பயணித்து, மீண்டும் தாய்த்தமிழ்நாடு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story