முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 31-ந் தேதி டெல்லி பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 31-ந் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
சென்னை,
துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு திறப்பு விழா மற்றும் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்.
துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவர் சென்னை திரும்புகிறார்.
டெல்லி பயணம்
அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வருகிற 31-ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார்.
அப்போது, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பேசுகிறார். மேலும், டெல்லியில் ஏப்ரல் 2-ந் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார்.
சோனியாவுடன் சந்திப்பு
பின்னர் 31-ந் தேதி இரவில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
மறுநாள் (ஏப்ரல் 1-ந் தேதி) காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை ஒரே இடத்தில் சந்தித்து பேசும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.
கலைஞர் அறிவாலய திறப்புவிழா
அடுத்த நாள் (ஏப்ரல் 2-ந் தேதி) மாலை 5 மணிக்கு டெல்லியில் கட்டப்பட்டு உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று இரவே சென்னை திரும்புகிறார்.

Related Tags :
Next Story