அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளது -அமைச்சர் மா. சுப்பிரமணியன்


அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளது -அமைச்சர் மா. சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 28 March 2022 11:08 AM IST (Updated: 28 March 2022 11:08 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகரித்துள்ளது. 

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பல மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ள பள்ளி கல்வித்துறை, தனியார் பள்ளிகளுக்கு நிகராக கற்பிக்கும் தன்மை மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.

அந்த வகையில் சைதை தொகுதியில் வருமுன் காப்போம் திட்ட முகாம் மற்றும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் ரூ.20 லட்சம் செலவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் . இவ்விழாவில் சென்னை மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ரூ.12.39 லட்சத்தில் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளது என்றார்.

Next Story