சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை: மாணவர் ஒருவர் கைது


சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை: மாணவர் ஒருவர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 11:26 AM IST (Updated: 28 March 2022 12:55 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மாதர் சங்கம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், 8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை நேற்று இரவு மேற்குவங்கம் சென்றது.

இந்த நிலையில், ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் இன்று கைது செய்தனர். டைமண்ட் ஹார்பர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கிங்சோ தெப்சர்மா தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து வாரண்ட் பெற்ற பின் கிங்சோ தெப்சர்மாவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்.

Next Story