சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன்: பி.வி.சிந்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!


சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன்: பி.வி.சிந்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
x
தினத்தந்தி 28 March 2022 12:45 PM IST (Updated: 28 March 2022 12:45 PM IST)
t-max-icont-min-icon

சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் புசனன் ஓங்பாம்ருங்பானை எளிதில் தோற்கடித்து மகுடம் சூடினார். இந்த சீசனில் சிந்து வென்ற 2-வது பட்டம் இதுவாகும்.

இந்த நிலையில், சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சுவிஸ் ஓபன் 2022 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெற்றி பெற்று, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீசனின் 2-வது பட்டத்தை வென்று மீண்டும் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, நம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story