கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை(2.3.2022) உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(30.3.2020)நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3.3.2022, 1.04.2022 தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story