விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்: சிபிசிஐடி மனு
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு அளித்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக அவரது காதலன் ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா்.
முதற்கட்டமாக இவ்வழக்கில் கைதான 8 போ மீதும் 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் முத்தரசி தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
இந்த வழக்கை ஆரம்ப நிலையில் கையாண்ட விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனாவிடம் வழக்கின் முந்தைய விவரங்கள் கேட்டறியப்பட்டது. இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மருந்துக் கிட்டங்கியை ஆய்வு செய்யப்பட்டது.
சிபிசிஐடி காவல் ஆய்வாளா்கள் ராஜகுமாரி, ஜான்கென்னடி, சாவித்திரி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஹரிகரன், சுனைத் அகமது உள்ளிட்ட கைதான 8 பேரின் வீடுகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அதில், சிலரது வீடுகளில் இருந்த கணினி, லேப்டாப் ஆகியவற்றையும் ஆய்வு செய்துள்ளனா். மேலும் அவா்களது நண்பா்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைதான பள்ளி மாணவா்கள் 4 போ ராமநாதபுரத்தில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும் இந்த வழக்கில் கைதாகி, ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோா் சனிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடைக்கப்பட்டனா். பாதுகாப்பு காரணங்களுக்காக 4 பேரும் மதுரை மத்தியச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா் .
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி சார்பில் டிஎஸ்பி வினோதினி நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story