துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய், அபுதாபி பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
சென்னை,
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக துபை, அபுதாபிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் துபாய் சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் துபாய், அபுதாபி பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
Related Tags :
Next Story