அரசு பள்ளிக்கு சொந்தமான ரூ 70 லட்சம் இடத்தை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை முன்னாள் அமைச்சர் மகன் மீது வழக்கு

அரசு பள்ளிக்கு சொந்தமான ரூ 70 லட்சம் இடத்தை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை முன்னாள் அமைச்சர் மகன் மீது  வழக்கு
x
தினத்தந்தி 28 March 2022 9:19 PM IST (Updated: 28 March 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அரசு பள்ளிக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்பிலான இடத்தை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்த முன்னாள் அமைச்சர் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி
புதுச்சேரியில் அரசு பள்ளிக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்பிலான இடத்தை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்த முன்னாள் அமைச்சர் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு பள்ளி இடம்

புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டில் அன்சாரி துரைசாமி அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்துக்கு போலியான பத்திரம் தயார் செய்து கடந்த 2008-ம் ஆண்டு புதுவையை சேர்ந்த 2 பேருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. 
இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் (பெண் கல்வி) நடனசபாபதி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

முன்னாள் அமைச்சர் மகன்

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், புதுவை மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கதிர்வேல் என்பவரின் மகன் வி.கே.பாண்டியன் மற்றும் சிலர் போலி பத்திரம் தயார் செய்து இடத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் ஆகும். 
இந்த வழக்கில் பாண்டியனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த பாண்டியன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story