ஒரு நாள் மின் பயன்பாடு "தமிழக வரலாற்றில் இல்லாத புதிய உச்சம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி


ஒரு நாள் மின் பயன்பாடு தமிழக வரலாற்றில் இல்லாத புதிய உச்சம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 28 March 2022 11:26 PM IST (Updated: 28 March 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று மட்டும் அதிகபட்ச மின்தேவையை மின்வாரியம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சமாக உயர்வடைந்துள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டில் இன்று மட்டும் 17,106 மெகாவாட் மின்தேவையை மின்வாரியம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். 

கடந்த ஆண்டு ஏப்.9 ஆம் தேதி அதிகபட்சமாக 16,846 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரேநாளில் 17,106 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story