மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - ஐகோர்ட்டு உத்தரவு


மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 March 2022 7:00 AM IST (Updated: 29 March 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரால் ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மீனவர்கள் எதற்காக எல்லை தாண்டி செல்ல வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கோர்ட்டை தான் அணுக வேண்டும். அன்னிய நாட்டுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. தமிழ்நாடு மீனவர்களின் கைதுக்கு அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும். 

இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Next Story