டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு


டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 29 March 2022 8:25 AM IST (Updated: 29 March 2022 8:25 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 29-ந் தேதி (இன்று) உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

30-ந் தேதி (நாளை) கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 31-ந் தேதி, ஏப்ரல் 1-ந் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story