காஞ்சிபுரம்: அரசுப் பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..!
அரசுப் பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகள், சமூக வலைளதங்களில் பரவின. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவி தாமே கழிவறையை சுத்தம் செய்தாரா அல்லது, வேறு யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா? உள்ளிட்ட கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் கழிவறையை சுத்தம் செய்வதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story