முடிந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும் திமுகவிற்கு அண்ணாமலை சவால்


முடிந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும் திமுகவிற்கு அண்ணாமலை  சவால்
x
தினத்தந்தி 29 March 2022 1:23 PM IST (Updated: 29 March 2022 1:33 PM IST)
t-max-icont-min-icon

முடிந்தால் என்னை திமுக அரசு கைது செய்யட்டும். அடுத்த 6 மணி நேரத்திற்கு நான் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன் என பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நான் அடுத்த 6 மணி நேரத்திற்கு நான் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன். முடிந்தால் கைது செய்யுங்கள். 

நீங்கள் என்னை கைது செய்யாவிடில் மக்களிடம் மாட்டிக் கொள்வீர்கள். எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் தான் உள்ளது.  என்னிடம் ரூ 610 கோடி இல்லை. தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை முடிந்தால் தொட்டு பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.

Next Story