முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..!!
முதற்கட்டமாக 20,000 வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும், வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் 20,000 வீடுகள் கட்ட அரசு மானியம் வழங்க ரூ.499.227 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பசுமை வீடு திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பட்டியலின மக்களுக்கு தலா ரூ.1.1 லட்சம் மானியத்தில் 11,197 வீடுகளும், பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.3 லட்சம் மானியத்தில் 8,803 வீடுகளும் கட்டப்பட உள்ளன.
அனைத்து வீடுகளும் முறையாக கட்டப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு நிலையில், அதை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி பின் மானியத் தொகையை விடுவிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story