எம் பி பி எஸ் படிப்பிற்கான இறுதி கட்ட சென்டாக் கலந்தாய்வு 2 ந் தேதி நடக்கிறது


எம் பி பி எஸ்  படிப்பிற்கான  இறுதி கட்ட சென்டாக் கலந்தாய்வு 2 ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 30 March 2022 12:05 AM IST (Updated: 30 March 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 2-ந் தேதி நடப்பதாக சென்டாக் அறிவித்துள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு  வருகிற 2-ந் தேதி நடப்பதாக சென்டாக் அறிவித்துள்ளது.

இறுதி கட்ட கலந்தாய்வு

புதுச்சேரி சென்டாக் கன்வீனர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த 28-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இறுதி கட்ட (மாப் அப்) சென்டாக் கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. 
அந்த கலந்தாய்வு வருகிற 2-ந் தேதி நடக்கிறது. இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடும், 10 மணிக்கு அரசு ஒதுக்கீடு மாணவர்களுக்கும் (அனைத்து இட ஒதுக்கீடு), 10.30 மணிக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், 11 மணிக்கு சிறுபான்மையின ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மதியம் 2 மணிக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும்  நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள 1 இடத்திற்கு 10 பேர் என்ற விகிதத்தில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் பதிவு கட்டணத்தை செலுத்தி தங்கள் விருப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்னுரிமை

இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் கிடைத்த மாணவர்கள் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். இதேபோல் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரியிலும், மாகி மகாத்மா காந்தி அரசு கல்லூரியிலும், ஏனாம் அரசு கலை கல்லூரியிலும் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் புனிதமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாப்-அப் கலந்தாய்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் இல்லை என்றால் அந்த இடஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Next Story