வீணாகும் காய்கறிகள்: கோயம்பேடு வணிக வளாகத்தில் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும்
வீணாகும் காய்கறிகள்: கோயம்பேடு வணிக வளாகத்தில் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஒரு வார காலமாக 5 டன் எடை கொண்ட நல்ல காய்கறிகள் கோயம்பேடு சந்தை வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் கொட்டி கிடக்கிறது.
நல்ல தரமான காய்கறிகள் யாருக்கும் பயன் இல்லாமல் வீணடிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்ற காய்கறிகளை சேமித்து கொள்ள ஏதுவாக குளிர்சாதன கிடங்கு ஒன்றை கோயம்பேடு வணிக வளாகத்துக்குள் ஏற்படுத்த வேண்டும். அதிக வரத்து காரணமாக குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும்போது அதனை அரசே கொள்முதல் செய்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த எதிர்பார்ப்பு காய்கறி மொத்த விற்பனையாளர்கள் இடையேயும், சிறு விற்பனையாளர்கள் இடையேயும், நுகர்வோர்கள் இடையேயும் தற்போது உள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கை அனைவருக்கும் பயன் அளிப்பதாக அமையும். எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறிகள் வீணாக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைத்து தரவும், காய்கறிகளை குறைந்த விலையில் மக்களிடையே சேர்க்கவும், வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story