கோடைகாலத்தை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை இடையே மேலும் ஒரு விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையம் சமீபகாலமாக பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. அதிக அளவில் பயணிகள் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி-சென்னை இடையே 3 நேரங்களில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
அதன்படி வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்னையை சென்றடைகிறது.
Related Tags :
Next Story