தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறுகிறது.
தஞ்சாவூர்,
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் திருத்தேரோட்டம் என்பது நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதற்காக முன்னதாக கடந்த மாதம் 7ம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மாலை சாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இது போல் 18 நாட்களும் தஞ்சை பெரிய கோவிலில் சாமி புறப்பாடு, அலங்காரம், பூஜைகள் என நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக தஞ்சாவூர் மேல வீதி பகுதியில் ஏப்ரல் 13ம் தேதி திருதேரோட்டம் நடைபெறும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேரோட்டம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story