சேலத்தில் பரபரப்பு: ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற மாணவன்..!


சேலத்தில் பரபரப்பு: ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற மாணவன்..!
x
தினத்தந்தி 30 March 2022 10:04 AM IST (Updated: 30 March 2022 10:04 AM IST)
t-max-icont-min-icon

தலை முடி வெட்ட சொன்ன தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற மாணவன், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம்,  ஆத்தூர்  அருகே மஞ்சினி  கிராமத்தில்  உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தலைமுடி வெட்டாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியர் மாணவனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த மாணவன் தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாற்காலி மீதிருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கு வந்த மற்ற ஆசிரியர்கள் ரகளையில் ஈடுபட்ட மாணவனை சமாதான படுத்தினர். இது குறித்து தகவலறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாணவனிடம் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி  கூறியுள்ளனர்.

பள்ளிக்கு வந்த பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தலைமை  ஆசிரியர் தெரிவித்தார். அப்போது மாணவன் தனது பையில் இருந்து, காலி பீர் பாட்டிலை எடுத்து உடைத்தது தலைமை  ஆசிரியரை பாட்டிலால் குத்த முயன்றுள்ளான். உடனடியாக சுதாரித்த சக ஆசிரியர்கள் மாணவனை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வந்த ஆத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர்  மாணவனை  அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Next Story