சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் குழு தலைவர்கள் இன்று தேர்வு


சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் குழு தலைவர்கள் இன்று தேர்வு
x
தினத்தந்தி 30 March 2022 10:13 AM IST (Updated: 30 March 2022 10:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் குழு தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் குழு தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர். மறைமுக தேர்தல் மூலம் மண்டலக் குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

அதைதொடர்ந்து, பிற்பகல் 2:30 மணிக்கு கணக்குகள் மற்றும் தணிக்கை; கல்வி, அறிவொளி, விளையாட்டு, பூங்கா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வரி விதிப்பு மற்றும் நிதி, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் ஆகிய 6 நிலைக்குழுக்களுக்கு தலா 15 உறுப்பினர்கள் என, 90 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள, 15 மண்டலக்குழு தலைவர் பதவிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஓரிரு இடங்கள் கிடைக்கும் என அந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 15 மண்டலங்களிலும் தி.மு.க.,வினரே பெரும்பான்மையுடன் இருப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு மண்டல தலைவர் பதவி வழங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Next Story