ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம்..!


ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம்..!
x
தினத்தந்தி 30 March 2022 11:47 AM IST (Updated: 30 March 2022 11:47 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில், புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில விசாரணைகள் செயலாளர் இல்லாமல் நடந்து வந்த நிலையில், தற்போது புதிய செயலாளரை தமிழக அரசு நியமித்துள்ளது.

Next Story