மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - விஜயகாந்த்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 30 March 2022 4:19 PM IST (Updated: 30 March 2022 4:19 PM IST)
t-max-icont-min-icon

மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்து கட்டணம் வசூல் செய்வதால் 200 யூனிட் மற்றும் 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் மின் உபயோகம் அதிகமாகும். இதனால் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story