மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல் ; அவமானத்தால் தற்கொலை
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சிதம்பரம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் ,அவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதிவைத்து விட்டு அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் . கடிதம் மற்றும் மாணவியின் செல்போனை கைபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story