கடலூர்: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது....!


கடலூர்: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.10 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது....!
x
தினத்தந்தி 30 March 2022 4:45 PM IST (Updated: 30 March 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுபாக்கம்,

கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுற்றுப்புற கிராம விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்

இங்கு வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 44) பில் கிளார்க்காகவும், சிதம்பரம் அடுத்த புலாமேடு கிருஷ்ணசாமி( 45) என்பவர் லோடு மேனாகவும் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதூரை சேர்ந்த அழகுவேல் என்பவர் சிறுபாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் தனது 200 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வந்து உள்ளார்.

அப்போது அவரிடம்  ராமச்சந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அழகுவேல் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று இரவு 12 மணி அளவில் ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலா போலீசார் நெல் கொள்முதல் நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது  அழகுவேலிடம் லஞ்சம் வாங்கிய ராமச்சந்திரன் மற்றும் கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.

Next Story