சட்டசபையில் வெளிநடப்பு செய்தது ஏன் எதிர்க்கட்சி தலைவர் சிவா விளக்கம்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது சட்டசபையில் வெளிநடப்பு செய்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா விளக்க மாககூறினார்.
புதுச்சேரி
சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வெளிநடப்பு செய்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு புதுச்சேரிக்கு போதிய நிதிதராமல் புறக்கணித்து வருகிறது. தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படும். முதல்-அமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசுவதில்லை. பா.ஜ.க.வின் திட்டங்கள் புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்படுகிறது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியான மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் சேர்ப்போம் உள்ளிட்ட எதையும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.
மின்துறை தனியார் மயம், மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது குறித்து விவாதிக்க அனுமதி கோரினோம். அதற்கும் அனுமதி தரவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு சிவா கூறினார்.
Related Tags :
Next Story