சொத்துக்காக அத்தை கொலை:வாலிபருக்கு ஆயுள் தண்டனை


சொத்துக்காக அத்தை கொலை:வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 31 March 2022 2:43 AM IST (Updated: 31 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

சொத்துக்காக அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சிக்கமகளூரு: சொத்துக்காக அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. 

சொத்தை அபகரிக்க திட்டம்

தாவணகெரே (மாவட்டம்) டவுனில் சரகல் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் பாக்கியம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சிவக்குமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். பின்னர் பாக்கியம்மா தனது மகளை அக்காள் வீட்டில் விட்டு இருந்தார். 

இந்த நிலையில் சிவக்குமாரின் அக்காள் மகன் அபிராஜ் (வயது 30). இவர் தனது அத்தையான பாக்கியம்மாவின் சொத்தை அபகரிக்க முடிவு செய்தார். இதற்காக பாக்கியம்மா வீட்டிற்கு ஆண்கள் சிலர் வந்து செல்வதாக கூறி அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறினார். 

வெட்டி படுகொலை

இதுகுறித்து பாக்கியம்மாவிற்கு ெதரியவந்தது. உடனே அவர் அபிராஜிடம் இதுகுறித்து கேட்டு முறையிட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த அபிராஜ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி பாக்கியம்மாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.

அந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த தாவணகெரே டவுன் போலீசார் அபிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக தாவணகெரே கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்பட்டு விசாரணை முடிந்தது. 

ரூ.10 ஆயிரம் அபராதம்

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தாவணகெரே கோர்ட்டு நீதிபதி ஹர்ஷவர்தன் தீர்ப்பு கூறினார். 

அதில் சொத்துக்காக சொந்த அத்தையை கொலை செய்த குற்றச்சாட்டு அபிராஜ் மீது நிரூபிக்கபட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள்தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story